இலங்கைக் கிளை ​- முதலாம் சந்திப்புக் கூட்டம்

கூட்ட அறிக்கை
சர்வதேச தமிழர் மரபு அறக்கட்டளை இலங்கை அமைப்பின் முதலாவது கூட்டம்யாழ்ப்பாணம்​ உரும்பிராய் ASN  கல்வி நிலையத்தில்  11.2.2019  மாலை 6  மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பிய அமைப்பின் செயலாளர் திரு. யோகநாதன்  புத்ரா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்விற்கு பல்கலைக்கழக  வரலாற்றுத்துறை ​பேராசிரியர்கள்,  விரிவுரையாளர், தொல்லியல் துறையைச்​ ​சேர்ந்தோர்  மற்றும் ஆசிரியர்கள்,கணினித்துறை சார்ந்தவர்கள் எனப் பலர் சமூகமளித்திருந்தனர்.
  • இந் நிகழ்வில் திரு யோகநா​தன்​ புத்ரா அவர்கள் அமைப்பின்  அமைப்பு விதிகள் பற்றிக் கலந்துரையாடினார்.
  • தொடர்ந்து அங்கத்தவர்களால் அறிமுகம்  இடம்பெற்றது.
  • அத்துடன் அமைப்பின் எதிர்காலத்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
  • இந்நிகழ்வின்  போது போரினால்  பாதிக்கப்பட்ட மீள் குடியேற்றம் பாடசாலை யான யா/குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலய பௌதீகவளத்த  தேவைக்காக ​சர்வதேச ​தமிழ் மரபு அறக்கட்டளையின் முதலாவது உதவித்திட்டமாக ​ஐரோப்பியக் கிளையின் சார்பில் வழங்கப்பட்ட நன்கொடை ​50000ரூபா பாடசாலையின் வளத்தேவைக்காக வழங்கப்பட்டது.
த.ம.அ ஐரோப்பியக் கிளையின் செயலாளர் திரு.யோகநாதன் புத்ரா ஐரோப்பியக் கிளை சார்பாக பள்ளிக்கூட மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்குகின்றார்.
முதல் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
முதல் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
த.ம.அ ஐரோப்பியக் கிளையின் செயலாளர் திரு.யோகநாதன் புத்ரா த.ம.அ இலங்கைக் கிளை செயற்குழுவினரால் சிறப்பிக்கப்படுகின்றார்.
​அன்புடன்
வாலன்ரீனா இளங்கோவன்
த.ம.அ இலங்கை கிளை பொறுப்பாளர்​

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *