கண்ணில் திரையிடுகின்றன

‘கண்ணில் திரையிடுகின்றன’

சு.இராஜசேகரன்

அறியாப்பருவத்தே தலையிலே போட்ட சுமையின் தாக்கம் முதுமையில் தலைவலி எனவும், தலைமுடி உதிர்ந்து போய்விட்டன எனவும், பாரத்தின் சுமையால் இன்று கூனாகி நிற்பதோடு, அந்த தாய் முதுமையில் வாடுகின்றபோது நெஞ்சம் நெகிழ்கி றது. …..

காலில், கையில் பட்ட காயங்களை சுண்ணாம்

பைத் தடவி சமாளித்ததையும், சேற்றுப்புண்ணுக்கு தேங்கா எண்ணையில் எரித்த காகிதத்தை குழப்பி போட்டதையும். வயிற்று வலியினால் நான் தவிக்கு ம்போது வெற்றிலையுடன் உப்பையும் சீரகத் தையு ம் சேர்த்து மடக்கி திண்ண சொல்லி குடிக்க கொடு த்த தையும், சிலவேளை வயிற்று சொருகல் வந்து படாத பாடு படும்போது வயிற்றைத்தடவி நீவி விட்டதையு ம் , கண்டதையெல்லாம் தின்று வயிற்றோட்டத்தினால் தடுமா ரும் போது மஞ்சளை அரைத்து மூன்று உருண்டை யாக்கி அதனை மாரியம்மனை நினைத்து குடிக்க கொடுத்த அந்த நாட்களின் நினைவுகள் வந்து போகின்றன.


இன்று தொட்டதெற்கெல்லாம் வைத்தியசாலை அன்று நீயே எங்கள் நடமாடும் ‘ ஒளசத ‘ ஊற்று . வலிபம் தளர்ந்த பின்பு தான் இதுவெல்லாம் மனக் கண்ணில் திரையிடுகின்றன. கண்ணீர் முகிழ்வதோடு

Author: Dr.K.Subashini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *